பதக்கம் பெற்ற அன்பு இல்ல சிறுவர்கள் கௌரவிக்கப்பட்டனர் : 01-Dec-2017

இன்று காலை முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தில் ஒளிவழா நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக முல்லைத்தீவு மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் திருவாட்டி.ரூபவதி-கேதீஸ்வரன், தலைமை ஏற்பவராக வைத்தியகலாநிதி திரு.து.வி.ஜெயக்குலராஜா, இல்ல தந்தை திரு.செல்வராசா-பத்மநாதன் உட்பட பல விருந்தினர்களும், செஞ்சோலை, பாரதி, அன்பு இல்ல சிறுவர்கள் நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் சிறப்பு நிகழ்வாக 2017ம் ஆண்டிற்கான இலங்கை கராத்தே சம்மேளனம் மாகாண, தேசிய ரீதியில் நடாத்திய கராத்தே போட்டியில் பங்குபற்றி தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களைப் பெற்ற அன்பு சிறுவர் இல்ல சிறுவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வின்போது சிறுவர்களுக்கு கராத்தே ஆசிரியராக இருந்து சிறுவர்களின் வெற்றிக்கு காரணமாக இருந்த திரு.கா.நாகேந்திரம் (வள்ளுவன் மாஸ்ரர்) அவர்களும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இலங்கை கராத்தே சம்மேளனம் நடாத்திய இக் கராத்தே போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 105 பேரும், வடமாகாணத்திலிருந்து 500 பேரும் என, மொத்தமாக இலங்கையில் தேசிய ரீதியாக 5000 பேர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டிகளிலேயே முல்லைத்தீவு முத்தையன்கட்டில் அமைந்துள்ள அன்பு சிறுவர் இல்ல சிறுவர்கள் கலந்துகொண்டு பதக்கங்களை பெற்று தாம் கல்வி கற்கும் பாடசாலைக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கும், வடமாகாணத்திற்கும் பெருமை சேர்த்தனர்.

இவர்களை கௌரவித்து பாராட்டுவதில் இல்ல தந்தை திரு.செ.பத்மநாதன் அடங்கலாக அனைவரும் பெருமைகொள்கிறோம்.

A04

A05

A06

A07

A08

A09

A10

A11

A12

A13

A14

A15

A16

A17

A18

A19

A20

A23

a24

B02

28-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு லண்டனைச் சேர்ந்த பிரமிக்கா-சந்திரகுமார் அவர்களின் முதலாவது பிறந்தநாளை முன்னிட்டும் ►►►

18-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு கனடாவைச் சேர்ந்த திரு.S.சரத்சந்திரன் அவர்களின் சகோதரரான அமரர் S.பொன்னுத்துரை ►►►

13-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு கீர்த்தி-கரிகாலன் அவர்களின் இரண்டாவது பிறந்தநாளை முன்னிட்டு 13-01-2015 அன்று ►►►