மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்துடன் தேசிய போட்டியில் : 21-Jul-2016

முல்லைத்தீவு முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்ல சிறுமிகள் 2016 ம் ஆண்டிற்கான இந்து அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையில் நடாத்தப்பட்ட ஆக்கத்திறன் விருத்திப்போட்டியில் பங்குபற்றினர்.

இதில் நாடகம், நடனம் ஆகிய பிரிவுகளில் கலந்துகொண்ட பாரதி இல்ல சிறுமிகள் 09-07-2016 அன்று பிரதேச மட்டத்தில் நடந்த போட்டியில் முதலாம் இடத்தைப்பெற்று மாவட்டமட்ட போட்டிகளுக்கு தெரிவாகினர். பின்னர் மாவட்ட மட்டத்திலும் நடந்த போட்டிகளில் முதலாம் இடத்தினைப்பெற்று தற்போது தேசிய ரீதியான போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

இவர்களின் வெற்றிக்கு இல்ல தந்தையான திரு.செ.பத்மநாதன், இல்ல நிர்வாகிகள், இல்ல சகோதரிகள் அனைவரும் வாழ்த்தி பாராட்டுகிறோம். அத்துடன் தேசிய ரீதியான போட்டிகளிலும் பரிசில்கள் பெற வாழ்த்துகிறோம்.

Bharathy_Dance_1

Bharathy_Dance_2

Bharathy_Dance_3

28-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு லண்டனைச் சேர்ந்த பிரமிக்கா-சந்திரகுமார் அவர்களின் முதலாவது பிறந்தநாளை முன்னிட்டும் ►►►

18-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு கனடாவைச் சேர்ந்த திரு.S.சரத்சந்திரன் அவர்களின் சகோதரரான அமரர் S.பொன்னுத்துரை ►►►

13-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு கீர்த்தி-கரிகாலன் அவர்களின் இரண்டாவது பிறந்தநாளை முன்னிட்டு 13-01-2015 அன்று ►►►