முத்தமிழ் விழாவும், நத்தார் விழாவும் : 24-Dec-2015

பாரதி, அன்பு, செஞ்சோலை இல்ல சிறுவர்கள் மிகவும் மகிழ்வுடன் கலந்து கொண்ட இவ்வருட முத்தமிழ் விழாவும், நத்தார் விழாவும் இணைந்ததான நிகழ்வு இன்று முல்லைத்தீவு முள்ளியவளை பாரதி சிறுவர் இல்லத்தின் கலையரங்க மண்டபத்தில் நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ரூபவதி-கேதீஸ்வரன், நெர்டோ நிறுவனத்தின் செயலரும் இல்ல தந்தையுமான திரு.செல்வராசா-பத்மநாதன், கனடாவிலிருந்து வந்திருந்த திரு.இராசதுரை, வைத்தியகலாநிதி திரு.ஜெயகுலராஜா, திரு.தயாபரன், வடமாகாணசபை உறுப்பினர் திரு.சிவநேசன்  மற்றும் ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

BHARATHY_24122015_1

BHARATHY_24122015_2

 

விருந்தினர்களை வரவேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் அடுத்து மங்கள விளக்கு விருந்தினர்களால் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து இறைவணக்கம் இடம்பெற்றது.

BHARATHY_24122015_3

BHARATHY_24122015_4

BHARATHY_24122015_5

BHARATHY_24122015_6

BHARATHY_24122015_7

BHARATHY_24122015_8

BHARATHY_24122015_9

BHARATHY_24122015_10

BHARATHY_24122015_11

BHARATHY_24122015_12

 

இறைவணக்கத்தைத் தொடர்ந்து பாரதி சிறுவர் இல்ல சிறுமிகளின் மிக நேர்த்தியானதும், அழகானதுமான வரவேற்பு நடனம் இடம்பெற்றது. தொடர்ந்து இயேசு பிறப்பின் அழகான பாடல் ஒன்றிற்கான அபிநய நடனத்தை செஞ்சோலை இல்ல சிறுமிகள் அழகாக வழங்கினர். இதனைத்  தொடர்ந்து வரவேற்புரையை பாரதி இல்ல சிறுமி வழங்கினார்.

BHARATHY_24122015_13

BHARATHY_24122015_14BHARATHY_24122015_19

 

BHARATHY_24122015_21அடுத்து இல்ல தந்தையான திரு.செல்வராசா-பத்மநாதன் அவர்கள் தலைமை உரையை வழங்கினார். இவர் தனது உரையில் சிறுவர்களுக்கு நல்லாசிகளை இறைவனிடம் வேண்டி, வாழ்த்துகளை சிறுவர்களுக்கு தெரிவித்தார்.

BHARATHY_24122015_22அடுத்து அரசாங்க அதிபர் திருமதி.ரூபவதி-கேதீஸ்வரன் அவர்கள் ஆசியுரையை வழங்கினார். இவர் தனது உரையில் இவ்வாறான நிகழ்வுகள் சிறுவர் இல்லங்களில் நடைபெறுவது மகிழ்ச்சி தருவதாக குறிப்பிட்டார். தொடர்ந்து பாரதி, அன்பு, செஞ்சோலை சிறுவர் இல்லங்கள் அரச உத்தியோகத்தர்களின் ஆலோசனைகளையும் பெற்று சிறப்பாக இயங்கி வருவதாகப் பாராட்டினார். சிறுவர்கள் சமத்துவமாக வளர்வதை குறிபிட்டு உரையாற்றியதுடன் சிறுவர்கள் கல்வியால் மேலும் வளர தமது வாழ்த்துகளையும், ஆசிகளையும் தெரிவித்தார்.

அடுத்து வடமாகாண உறுப்பினர் சிற்றுரை ஆற்றி, சிறுவர்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

BHARATHY_24122015_23

 

இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இருந்து வந்திருந்த பஞ்சமூர்த்தி குமரன் குழுவினரின் ‘‘நாதசங்கமம்” வாத்திய கலைநிகழ்வு இடம்பெற்றது. இரசனையுடன் கூடியதான இவ் வாத்திய சங்கமம் சிறுவர்கள் உட்பட அனைவரையும் கவர்ந்தது. இவர்களை இல்ல தந்தையான திரு.செ.பத்மநாதன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.

BHARATHY_24122015_28

BHARATHY_24122015_30

 

அடுத்து செஞ்சோலை ஆண்கள் இல்ல சிறுவன் துளசிமாறனின் பொதுஅறிவு தொகுப்பு, பாரதி இல்ல சிறுமிகளின் நடனம், செஞ்சோலை இல்ல சிறுமிகளின் இயேசு பிறப்பு தொடர்பான வில்லுப்பாட்டு, அன்பு இல்ல சிறுவர்களின் நாடகம் என்பன இடம்பெற்றது. தொடர்ந்து மதிய உணவிற்காக இடைவேளை விடப்பட்டது.

BHARATHY_24122015_31

BHARATHY_24122015_32

BHARATHY_24122015_33

BHARATHY_24122015_34

BHARATHY_24122015_35

 

மதிய உணவினை தொடர்ந்து…

செஞ்சோலை இல்ல சிறுமிகளின் அபிநயநடனம், பாரதி இல்ல சிறுமிகளின் பாடல் என்பன இடம்பெற்றது.

அடுத்து ஆங்கில ஆசிரியர் திரு. உரையாற்றினார். இவர் நத்தார் நிகழ்வு ஏன் கொண்டாடப்படுகிறது என்ற கேள்விகளை முன்வைத்து அதை சிறுவர்கள் கடைப்பிடித்து நல்லவர்களாக வாழ வேண்டும் என வாழ்த்தியதுடன் ஒளிவிழா என்பதன் அர்த்தத்தை மிக அழகாக சிறுவர்களுக்கு வழங்கினார்.

BHARATHY_24122015_36

BHARATHY_24122015_37

BHARATHY_24122015_38

BHARATHY_24122015_39

BHARATHY_24122015_40

BHARATHY_24122015_41

BHARATHY_24122015_42

 

அடுத்து செஞ்சோலை ஆண் சிறுவர்களின் நாடகத்தை தொடர்ந்து… சிறுவர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நத்தார் தாத்தா நிகழ்வு மண்டபத்திற்கு வருகை தந்து சிறுவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். சிறுவர்கள் நத்தார் தாத்தாவுடன் மிக மகிழ்வாக ஆடி மகிழ்ந்தனர்.

BHARATHY_24122015_43

BHARATHY_24122015_44

BHARATHY_24122015_45

BHARATHY_24122015_46

BHARATHY_24122015_47

 

தொடர்ந்து… மாலை நிகழ்வாக யாழ்ப்பாணம் கருவி நிறுவனத்தினரின் “இராகசுதி” இசைச்சங்கமம் இடம்பெற்றது. இனிய பாடல்களை சிறுவர்கள் மகிழ்வாக கேட்டு மகிழ்ந்தனர். இவ் இசைச் சங்கமத்தில் செஞ்சோலை, பாரதி இல்ல சிறுமிகள் தமது பாடல் திறமைகளை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து நன்றியுரையுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுபெற்றது.

BHARATHY_24122015_48

BHARATHY_24122015_49

BHARATHY_24122015_50

BHARATHY_24122015_51

BHARATHY_24122015_52

BHARATHY_24122015_54

 

BHARATHY_24122015_15

BHARATHY_24122015_16

BHARATHY_24122015_17

BHARATHY_24122015_18

BHARATHY_24122015_20

BHARATHY_24122015_24

BHARATHY_24122015_25

BHARATHY_24122015_26

BHARATHY_24122015_27

BHARATHY_24122015_29

 

நிகழ்விற்கான ஒலிஅமைப்பை செழுமையாக வழங்கிய யாழ்ப்பாணம் நல்லுாரைச் சேர்ந்த சேகர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். அத்துடன் நிகழ்வுகள் சிறப்பாக அமைய ஆதரவும், உதவியும் வழங்கிய அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

28-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு லண்டனைச் சேர்ந்த பிரமிக்கா-சந்திரகுமார் அவர்களின் முதலாவது பிறந்தநாளை முன்னிட்டும் ►►►

18-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு கனடாவைச் சேர்ந்த திரு.S.சரத்சந்திரன் அவர்களின் சகோதரரான அமரர் S.பொன்னுத்துரை ►►►

13-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு கீர்த்தி-கரிகாலன் அவர்களின் இரண்டாவது பிறந்தநாளை முன்னிட்டு 13-01-2015 அன்று ►►►