தீபாவளி கொண்டாட்டமும், பிறந்தநாள் நிகழ்வும் : 10-Nov-2015

தீபாவளி தினமான இன்று முல்லைத்தீவு முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட தீபாவளி தினத்தன்றான கலைநிகழ்வுகளிலும், பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் இல்ல தந்தையும், NERDO நிறுவன செயலருமான திரு.பத்மநாதன், வட்டுக்கோட்டை இளைஞர் முன்னேற்ற கழக உறுப்பினர்கள், பாரதி இல்ல சிறுவர்கள், செஞ்சோலை இல்ல சிறுவர்கள், அங்கத்தவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதில் ஆரம்பத்தில் இறைவணக்கம், மங்கள விளக்கேற்றல், இம்மாதம் பிறந்த சிறுவர்களுக்கான பிறந்தநாள் கொண்டாட்டம் என்பன இடம்பெற்றன. இதில் பாரதி, செஞ்சோலை சிறுவர்கள் இடம்பெற்றனர். அடுத்து கலைநிகழ்வுகள் இடம்பெற்றன. கலைநிகழ்வுகளின் வரிசையில் முருக பக்திப் பாடலுக்கான அபிநய நடனமும், அரிச்சந்திர மயான காண்டமும் சிறப்பானதாக அமைந்திருந்தன. இவை ஏற்கனவே பரிசில்களைப் பெற்ற கலைநிகழ்வுகளாகும்.

இன்றைய நாளுக்கான மாலைநேர சிற்றுண்டியை வட்டுக்கோட்டை இளைஞர் முன்னேற்ற கழகம் வழங்கியிருந்தது. இவர்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Bharathy_01

Bharathy_02

Bharathy_03

Bharathy_04

Bharathy_05

Bharathy_06

Bharathy_07

Bharathy_08

Bharathy_09

Bharathy_10

Bharathy_11

Bharathy_12

Bharathy_13

Bharathy_14

Bharathy_15

Bharathy_16

Bharathy_17

Bharathy_18

Bharathy_19

Bharathy_20

Bharathy_21

Bharathy_22

Bharathy_23

Bharathy_24

 

28-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு லண்டனைச் சேர்ந்த பிரமிக்கா-சந்திரகுமார் அவர்களின் முதலாவது பிறந்தநாளை முன்னிட்டும் ►►►

18-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு கனடாவைச் சேர்ந்த திரு.S.சரத்சந்திரன் அவர்களின் சகோதரரான அமரர் S.பொன்னுத்துரை ►►►

13-Jan-2015

முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு கீர்த்தி-கரிகாலன் அவர்களின் இரண்டாவது பிறந்தநாளை முன்னிட்டு 13-01-2015 அன்று ►►►